in

தீபாவளி பண்டிகைக்கு அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் வழங்ககோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரியும் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

நாகை அருகே தேவூரில் தீபாவளி பண்டிகைக்கு வெல்லம், பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகளில் வழங்ககோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரியும் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்; களிமண்ணால் செய்த அதிரசம், சமோசா, மைசூர் பாக்கு, முறுக்கு உள்ளிட்ட தீபாவளி பலகாரங்களை பண்டிகை பஜார் என்ற பெயரில் காட்சிக்கு வைத்து முழக்கங்களை எழுப்பினர்

தீபாவளி திருநாள் அக்டோபர் 31 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும் பலகாரங்கள் செய்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு வாரமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனால் ஏழை எளிய குடும்பத்தினர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிப்படைந்த வருகின்றனர். பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தேவூர் கடைத்தெருவில் பண்டிகை பஜார் என்னும் பெயரில் களி மண்ணால் செய்த தீபாவளி பலாகரங்களை காட்சிக்குக்கு வைத்தபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இன்றைய விலைவாசி உயர்வால் தீபாவளிக்கு மக்கள் மண் பலகாரங்களை மட்டுமே சாப்பிட வேண்டி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி களி மண்ணால் செய்த முறுக்கு, அதிரசம், சோமாசா, பருப்பு உருண்டை, மைசூர் பாக்கு உள்ளிட்ட தீபாவளி பலகாரங்களை காட்சிக்கு வைத்தும், காய்கறிகளை மாலையாக அணிந்தும் பண்டிகை பஜார் என்ற பெயரில் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தா மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அனைத்து பொருட்களையும் ரேசன் கடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நாகையில் களி மண் பலகாரங்களை காட்சிக்கு வைத்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பர்பரப்பை ஏற்படுத்தியது

What do you think?

சுச்சி கார்த்திகை சண்டை மட்டும் இன்னும் ஓயவில்லை

திருச்சிராப்பள்ளி தென்னூர் ஆழ்வார் தோப்பில் இரண்டு பேக்கரிகளில் சோதனை