in

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய எம்எல்ஏ


Watch – YouTube Click

திருத்துறைப்பூண்டியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி எம்எல்ஏ மாரிமுத்து தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டத்தில் 5.4 லட்சம் மரக்கன்றுகளை நட காவேரி கூக்குரல் திட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்த ஆண்டு 5,40,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது அதன் தொடக்க விழா திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது விழாவில் திருத்துறைப்பூண்டி எம் எல் ஏ மாரிமுத்து நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் எம்எல்ஏ மாரிமுத்து நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் காவிரி கூக்குரல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

காட்டுயானைகள் முகாமிட்டதால் அனுமதி மறுப்பு

பெற்றோர்களுடன் நுங்கு சாப்பிட்டு நொங்கு வண்டி ஓட்டி மகிழ்ந்த குழந்தைகள்