அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகம் பலமுறை மக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு எட்டாவது வார்டு பகுதியான ஐயப்பன் நகர் கோழி பண்ணை காட்டு பிள்ளையார் கோயில் தெரு உட்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி சாக்கடை போல் காட்சி அளிக்கிறது..
இங்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகம் பலமுறை கோரிக்கை வைத்தும் மெத்தன போக்கையை கையாண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சாலை வசதி மின் வசதி குடிநீர் வசதி ஏதும் இல்லாமல் அனாதை போல பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் குளங்கள் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த மழை நீர் முழுமையாக தேங்கி குளம் நிறைந்து வீட்டுக்குள் வரும் சூழலில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். பலமுறை குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
இங்கு குளத்தில் விழுந்து குழந்தைகள் இறந்து போவதாகவும் இதன் மூலம் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வருவதாகவும் அச்சப்படுகின்றனர் மேலும் சமூக விரோதிகள் இப்பகுதியை கூடாரமாக பயன்படுத்தி சட்ட விரோத செயல்களை செய்து வருவதாகவும் அதனை தட்டி கேட்டால் அவர்கள் வீட்டை இடிப்பதாகவும் மிரட்டுவதாகவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அனாதை போல் வாழ்ந்து வரும் எங்கள் பகுதியில் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்றும் வேதனளிக்கின்றனர்.