புதுவை தலைமை செயலகம் அருகே நடைபாதையில் இருந்த பிரபல காபி கடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அதிரடியாக அகற்றினர்
புதுச்சேரி தலைமை செயலகம் அருகே பிரபல காபி கடை உள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த கடையின் மேற்கூரையில் நேற்று முன்தினம் மரக்கிளை விழுந்ததில் சேதமடைந்தது. இதனை அகற்றும் பணியில் கடை உரிமையாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து காபி கடை இயங்கி வருவதாக நகராட்சிக்கு புகார் சென்றது. இதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் துணையுடன் சம்பந்தப்பட்ட இடத்தை அகற்ற பொக்லைன் இயந்திரம் மூலம் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக பலர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் துணையுடன் இயந்திரம் மூலம் காப்பி பாரை முற்றிலும் அகற்றினர்.