in

நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது கோவில் யானை காந்திமதி மவுத்தார்கன் வாசித்து கோவில் ஊழியர்களுடன் வணக்கம் செலுத்தி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா மிகவும் விமர்சையாக நாடுமுழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரபல கோவில்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு இன்றளவும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி அவர்களால் வழங்கப்பட்ட விளக்கு தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசிய கொடி எடுத்து வந்தனர்.

தொடர்ந்து தேசிய கொடி பீடம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அதிகாரி ஏற்றி மரியாதை செய்தார்.

அப்போது கோவில் யானை காந்திமதி மவுத்தார்கன் இசைத்தும் மூன்று முறை பிளிறியும் தேசியக் கொடிக்கு வணக்கம் செய்தது அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து தேசியக்கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளும் விபூதி பிரசாதமும் வழங்கப்பட்டது.

What do you think?

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா