in

திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில் சரிந்து விழுந்தது

திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில் தூண் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோவில் இறுதி கட்டப் திருப்பணிகள் நடைபெற்ற வருகிறது.

இந்த வகையில் வயலூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக சோமரசம்பேட்டை- கோப்பு மெயின் ரோட்டில் நுழைவு வாயில் வளைவு இருந்தது. இது பழுதடைந்ததால் தற்போது அதன் அருகே புதிதாக நுழைவு வாயில் அமைக்கும் பணி உபயதாரர் மூலம் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு இன்று குறுக்கே கான்கிரீட் பீம் அமைக்கும் பணி நடைபெற்றது.

அதிகாலை தொழிலாளர்கள் கான்கிரீட் போட்டுவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் திடீரென சாரம் சரிந்ததால் புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில் இருபுறத் தூண்கள் மற்றும் பீம் முற்றிலும் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வயலூர் முருகன் கோவில் பக்தர்கள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மூவலூர் மகா மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளி திருவிழா

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்