in

செங்கம் அருகே புதிதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மூன்று மாதத்திலே இடிந்து விழுந்த மேற்கூறை பூச்சு

செங்கம் அருகே புதிதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம்
மூன்று மாதத்திலே இடிந்து விழுந்த மேற்கூறை பூச்சு குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி

செங்கம் அடுத்த முன்னூர் மங்கலம் கிராமத்தில் 2023-24 ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 15.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டிய அங்கன்வாடி கட்டிடத்தை 28/08/2024 அன்று கலசப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

மேலும் அங்காடி மையத்தில் 30 குழந்தைகள் பயின்ற நிலையில்

திறக்கப்பட்ட 73 நாட்களிலே அங்கன்வாடி மேற்கூரை பூச்சு இடிந்து விழும் அளவிற்கு கட்டப்பட்ட அரசு ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்டிடத் தர ஆய்வு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் சேதுபதியை தொடர்பு கொண்டு அங்கன்வாடி மையத்தின் மேல் கூரையின் சிமெண்ட் பூச்சு விழுந்தது குறித்து கேட்டதற்கு அரசு குறிப்பிட்ட அளவிலேயே சிமெண்ட் மற்றும் எம் சாண்ட் கலந்து பூசியதாகவும் தற்போது விழுந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என பதில் அளித்தார்.

What do you think?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திரு கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றம்

சேவை மைய டேபிளில் போன் இல்லாததால் கல்லூரி துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களுக்கு சேவை மையம்