பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அலுவலர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி மற்றும் 21 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை சரி செய்ய வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர் புற நூலகர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களுக்க வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஈவேரா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.