பிரபு பெயரில் இருக்கும் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
ஜப்தி உத்தரவை ரத்து செய்ய கோர்ட்டில் மனு. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தார்.
இந்த படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடம்மிருந்து 3 கோடியே 74 லட்சம் 75 ஆயிரம் கடனாக பெற்றார்.
வட்டியும் சேர்த்து தற்போது ஒன்பது கோடி முப்பத்தி ஒன்பது லட்சம் கொடுக்கும்படி ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தனபாக்கியம் என்டர்பிரைசஸ்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறிய தொகையை மனுதாரரிடம் துஷின் கொடுக்க தவறியதால் தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வீட்டில் துஷ்யந்த்..இக்கு எந்த பங்கும் இல்லை இந்த வீடு அவரது சகோதரர் பிரபு பெயரில் உள்ளது அதனால் அந்த வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.