in

அடங்காமல் வாடி வாசலில் நின்ற காளை அமைதியாக அழைத்து சென்ற உரிமையாளர்


Watch – YouTube Click

அடங்காமல் வாடி வாசலில் நின்ற காளை அமைதியாக அழைத்து சென்ற உரிமையாளர்

 

அடங்காமல் வாடி வாசலில் நின்ற காளையை பாசத்தோடு கயிறு போட்டு அமைதியாக அழைத்து சென்ற மாட்டின் உரிமையாளர் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

தஞ்சை மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அடங்காமல் பாய்ந்து ஓடும் காளைகள்.

தஞ்சை மாதக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் .

மாடுகள் வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது இதில் 600 காளைகள் மற்றும் 350 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாடுகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமாக பிடித்து வருகின்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சைக்கிள், கட்டில் குடம் குவளை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

போட்டியில் தஞ்சை புதுக்கோட்டை திருச்சி மதுரை அரியலூர் பல்வேறு ஊர்களில் இருந்து மாடுபிடி வீரர்களும் மற்றும் காளைகளும் கலந்து கொண்டன. இதில் சுல்லான் என்ற காளை வீரர்களை தினறடிக்க செய்த நிலையில் மாட்டின் உரிமையாளர் வல்லத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் மாட்டை தைரியமாக களத்தில் நின்று மாட்டிற்கு கயிறு போட்டு அழைத்து சென்றார்.

களத்தில் நின்று தைரியமாக விளையாடிய அந்த மாட்டை பாசத்தோடு அனைத்து கயிறு போட்டு கூட்டிச் சென்ற அவரை சுற்றி நின்று பார்த்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆச்சிரியத்தோடு அவரைப் பார்த்து ரசித்தனர்.

தற்போது வரை ஒரு மாடு பிடி வீரர் காயம் அடைந்துள்ளார் வெற்றி பெற்ற மாடுபிடி வீரருக்கு 1 பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

ரூ.29 -க்கு மானிய விலையில் பாரத் அரிசி

சிறையில் தீயாக பரவும் எய்ட்ஸ்