in

செங்கம் அருகே நடைபெற்ற எருது விடும் விழா சீரிபாய்ந்த காளைகள்


Watch – YouTube Click

செங்கம் அருகே நடைபெற்ற எருது விடும் விழா சீரிபாய்ந்த காளைகள்

 

செங்கம் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீரிபாய்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவனந்தல் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

எருது விடும் விழாவினை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து போட்டி துவக்கி வைக்க ஒன்றிய செயளாலர் முன்னிலை காளை ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தன.

போட்டியின் தூரமான 80 மீட்டர் தொலைவை குறைந்த வினாடியில் கடக்கும் காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக HF டீலக்ஸ் (செல்ப்) இரண்டாவது பரிசாக HF டீலக்ஸ் (நார்மல்) வாகன உட்பட 100 பரிசுகள் வழங்கப்படுகின்றது.

இந்த எருது விடும் விழாவை காண செங்கம், புதுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் 1000 மேற்பட்டவர்கள் பெண்கள் இளைஞர்கள் போட்டியினை கண்டு களித்தார்கள்.


Watch – YouTube Click

What do you think?

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம்

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை