காதல் தந்த வலி என்றும் மறையாது ….மீண்டும் …96 …. Part 2 விரைவில்
தமிழில் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் Trend இப்பொழுது கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது.
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி ஏனோ இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என்றாலும் பார்ட்…2 மோகம் என்னும் இயக்குனர்களை விட்டு அகலவில்லை.
2018 ஆம் ஆண்டு த்ரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர இருக்கிறது.
காதல் என்ற மாயாஜாலம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி மிகுந்த உணர்ச்சிகளைக் கொட்டிய 96 திரைப்படம் திரையில் மட்டும் பேசவில்லை வெளியே பேசாமல் முடியாமல் தவித்தா ஓவ்வோருவரின் உணர்ச்சிகளை சீண்டிய படம்.
இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொருவரும் தங்கள் முதல் காதலை அனுபவித்திருப்பார்கள்… முதல் பாகத்தில் திரிஷா தனது கடந்த கால காதலை மனதிற்குள் பூட்டி வைத்து மௌனமாக விஜய் சேதுபதியிடம் விடை பெற்று சிங்கப்பூருக்கு செல்வார் இரண்டாம் பாகத்தின் கதை சிங்கப்பூரில் இருந்து ஆரம்பிகிறது.
விஜய் சேதுபதி சிங்கப்பூர் செல்லும் போது அங்கு கணவர் குழந்தையுடன் வசிக்கும் திரிஷாவை சந்திக்கிறார். திரிஷா குடும்பத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை அறிந்து உதவ முன் வருகிறார்.
இதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் திருப்புங்கள் தான் இரண்டாம் பாகம். இதய துடிப்பு கூட நின்று விடும் ஆனால் காதல் தந்த வலி என்றும் மறையாது என்பதை மீண்டும் 96…சொல் வருகிறது.