in

வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வீதி உலா

வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வீதி உலா

 

 

வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோவிலில் 5 தேர்களில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வீதி உலா – திரளான பக்தர்கள் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான திருவாதிரை திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில், அந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்து கொடியேற்ற நிகழ்வை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

தொடர்ந்து, இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் திருத்தேர் பவனி உலா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்ச மூர்த்திகள் தனித்தனியே தேரில் வீதி உலா வருகின்றனர்.

இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து வரும் நிலையில், இந்த தேர்த்திருவிழாவானது வெகு சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும், தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசனானது நடைபெற்று வரும் நிலையில், குற்றாலத்திற்கு வருகை தந்துள்ள ஏராளமான ஐயப்ப பக்தர்களும் தற்போது இந்த தேர் திருவிழா நிகழ்வில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த நிகழ்வானது தற்போது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான ஆருத்ரா தாண்டவ தீபாராதனை நிகழ்வு வருகின்ற 13-ஆம் தேதியும் நடைபெற உள்ளது …..

What do you think?

தளபதி 69….இல் இணைத்த அசுர நடிகர்

மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்