மகனை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்த பெற்றோர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சக்திவேல் என்பவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரைச் சேர்ந்த வெளிநாடு வேலை சேர்க்கும் ஏஜென்ட் ராம்நாத் என்பவர் மூலமாக மலேசியாவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் புகாரி என்பவர் கடைக்கு கடந்து 2015 ஆம் ஆண்டு வேலைக்காக சென்றார்.
அவர் வேலைக்கு சென்றவுடன் பாஸ்போர்ட்டை கடை முதலாளி புகாரி வாங்கி வைத்துக்கொண்டு வேலை கொடுத்தார்.
பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல் பாஸ்போர்ட் கேடு முடிவடைந்து விட்ட நிலையில் அவரை திருப்பி ஊருக்கு அனுப்பாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளமும் தராமல் வேலை வாங்கி வந்ததாக சக்திவேல் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.
தன்னை ஊருக்கு அனுப்ப கோரி கடை முதலாளியிடம் கேட்டபோது அவர் மறுத்ததால் நான் மலேசியா இமிகிரேஷன் ஆபீசில் சரண்டர் ஆகி விடுவதாக கடை முதலாளியிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சக்திவேலை அடித்து காயப்படுத்தி தனி அறையில் அடைத்து வைத்து அடியாட்கள் துணையுடன் மிரட்டி வருவதாகவும் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு சிறை வைத்தது போல் காவலில் வைத்திருப்பதாகவும் சக்திவேல் பெற்றோர்.
இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் நேரில் புகார் அளித்தனர் தாங்கள் போன் செய்தால் மகன் எடுக்கவில்லை என்றும் தனது மகனுடன் பணியாற்றி வந்த செந்தில் என்பவர் இந்த தகவலை தெரிவித்ததாகவும் செந்திலுக்கு வீடியோ கால் செய்யும்போது சக்திவேல் தலையில் பலத்த காயங்களுடன் படுத்த படுக்கையாக ரூமில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் தமிழக அரசு தலையிட்டு தனது மகனை உயிருடன் மீட்டு தர வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.