in

நெல்லையில் இரண்டாவது நாளகவும் பலத்த மழை பெய்தது வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் இரண்டாவது நாளகவும் பலத்த மழை பெய்தது வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

 

நெல்லையில் இன்று இரண்டாவது நாளகவும் பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணிநேரம் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகள், சலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகலில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது நெல்லை மாநகர் பகுதியிலும் சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.

இந்த நிலையில் நெல்லையில் இன்று காலை வெயில் அடித்துவந்த நிலையில் மதியம் திடிரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு இரண்டாவது நாளாக கன மழை பெய்தது. மாநகரில் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, டவுண், பாளையங்கோட்டை, கேடிசிநகர், ஆகிய பகுதிகளிலும் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் ஆங்காங்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நெல்லையில் கடந்த சில வராங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரண்டு் நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெயில், மற்றும் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திற்கு மேலும் நான்கு நாட்களுக்கு கன மழை இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

திருவாரூர் காட்டூரில் பொற்பவள காளியம்மன் கோயில் காளிகட்டுத் திருவிழா

 திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48ஆம் ஆண்டு ஆடித்திருவிழா