in

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள்


Watch – YouTube Click

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள்

 

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத் தான் வாக்களிப்பார்கள். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் நாராயணசாமி பேட்டி.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்திகளை சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை சரிசெய்யவும், காரைக்காலில் சிறப்பு நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் ஜிப்மர் திறந்தால் மட்டும்போதாது, தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். ஜிப்மருக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் மேரிகட்டிடம், கடற்கரையில் பல்நோக்கு அரங்கம், காமராஜர் மணிமண்டபம் முழுமையாக பயன் படுத்தவில்லை. மேரிகட்டிடம் பிரதமரால் திறக்கப்பட்டு மூன்றரை ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடற்கரை பல்நோக்கு அரங்கம் 2 ஆண்டாக மூடிக்கிடக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. காமராஜர் மணி மண்டபம் அரசு விழாக்கள் நடத்த மட்டுமே பயன்படுத்துகிறது. நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. என்ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி புதிதாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தொழிற்சாலைகளை திறக்கவில்லை, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் கிடப்பில் கிடக்கிறது. இதுதான் ஆட்சியாளர்களின் சாதனை.

புதிய சட்டமன்றம் கட்டும் விவகாரத்தில் ஆளுநர், சபாநாயகர் இடையே பனிப்போர் நடக்கிறது. சபாநாயகர் எந்த உள்நோக்கத்தோடு ரூ.620 கோடியில் சட்டமன்றம் கட்ட நினைக்கிறார்? இதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் உடந்தையாக உள்ளனர். ஆளுநரிடம் உள்ள கோப்பு பரிமாற்றம் பற்றி சபாநாயகர் வெளியே பேசுவதே தவறு. இந்த ஆட்சியில் ஆளுநர், முதலமைச்சர், சபநாயகர், அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இவர்களால் சட்டமன்றம் கட்ட முடியாது. இதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காது. நிர்வாகரீதியிலான ஆளுநர், சபாநாயகர் சண்டை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை முதலமைச்சர் வேடிக்கை பார்க்கிறார்.

புதுச்சேரி போதை நகரமாகிவிட்டது. கஞ்சா ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை வில்லியனூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்களில் போதை ஸ்டாம்ப் விற்கப்படுகிறது. புதுச்சேரி காவல்துறை என்ன செய்கிறது? புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது. புதுச்சேரி மக்களின் நிம்மதியான வாழ்க்கை சுற்றுலா பயணிகள் வருகையால் கெட்டு வருகிறது.

அபின், பிரவுன்சுகர் உட்ப போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காவல்துறை ரெஸ்டோபார் உரிமையாளர்களிடம் கையூட்டு பெறுகின்றனர். இதை கட்டுப்படுத்த முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுச்சேரியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்து வருகிறோம். என்ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு தொகுதியை தாரைவார்த்துள்ளது. 3 நியமன எம்எல்ஏ, ராஜ்யசபா பதவியை பாஜக பறித்துக்கொண்டது. ரங்கசாமி தன் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள, ஆட்சியின் ஊழல்களை மத்திய பாஜக ஆட்சி கண்டுகொள்ளாமல் இருக்க பதவிகளை பாஜகவுக்கு கொடுத்து வருகிறார்.

பாஜக வேட்பாளர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். வேட்பாளரே இல்லாமல் பாஜக பாராளுமன்ற தேர்தலில் நிற்க பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் இதை பார்த்து வருகின்றனர். என்ஆர்.காங்கிரஸ், பாஜக சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் அரிதிபெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவார்.

காங்கிரசில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும். நாங்கள் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சித்தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதுச்சேரி மக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி, புதுச்சேரி தொகுதியில் போட்டியிட முன்வந்தால் எதிர்ப்பீர்களா? என நிருபர்களிடம் கேட்டபோது, அவர் அகில இந்திய தலைவர், எங்கள் கட்சியின் தலைவர். அவர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்க முடியுமா? தமிழிசை தமிழகத்தில் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டியதுதானே? என எதிர்கேள்வி எழுப்பினார்.


Watch – YouTube Click

What do you think?

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மேனகா, கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தீனார்