in

ஒரே வீட்டில் அடுத்தடுத்து பிடிபட்ட நான்கு பாம்புகள் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள்

ஒரே வீட்டில் அடுத்தடுத்து பிடிபட்ட நான்கு பாம்புகள் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள்

 

ஒரே வீட்டில் அடுத்தடுத்து பிடிபட்ட நான்கு பாம்புகள் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள். பிடிபட்ட பாம்புகள் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே கருவாழக்கரை மேலையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவரது வீட்டு வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓடுகளில் பாம்புகள் பதுங்கி இருப்பதாக சீர்காழி பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பெயரில் வந்த பாம்பு பிடி வீரர் சினேக் பாண்டியன் ஓடுகளில் பதுங்கி இருந்த பாம்புகளை பிடிக்க ஆரம்பித்தார்.

இதில் ஒன்றன்பின் ஒன்றாக 7அடி நீளமுள்ள மூன்று சாரை பாம்புகள் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது மூன்று சாரைப்பாம்பு ஒரு நல்ல பாம்பு மொத்தம் நான்கு பாம்புகள் அடுத்தடுத்து பிடிபட்டது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ந்து போயினர் பின்னர் பிடிபட்ட பாம்புகளை சினேக் பாண்டியன் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

What do you think?

மன அழுத்தம் காரணமாக வேளாண் துறை அலுவலர், வேளாண்துறை அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை

உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு.