கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மீனவ கிராம மக்கள்
வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க வலியுறுத்தி புதுச்சேரி18 மீனவ கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே மத்திய அரசு கொண்டு வர உள்ள வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத் திட்டங்களை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மீனவர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்களில் கடலில் 12 மைல்கள் தூரம் வரையில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்ய வேண்டும் என்பதே மீனவர்களுக்கு எதிரானது. மீன்பிடிக்கும் மற்றும் மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் குறித்து தெளிவாக பதிவு செய்ய வேண்டும். புதுச்சேரி கடற்கரை பகுதியில் சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் உல்லாச விடுதிகள் சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
மீனவர் கிராமங்களில் கடற்கரை முழுவதும் மீன்பிடி தொழில் சார்ந்த செயல்பாடுகளுக்கான பாரம்பரிய கலாச்சார இடங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடற்கரை மேலாண்மை திட்ட வரைபடங்கள் குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்…