அனுமதியை ரத்து செய்ய வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி பேட்டி
திண்டிவனம் ராமதாஸ் நகரில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆரம்பிக்கப்பட உள்ள மினரல் வாட்டர் கம்பெனியின் அனுமதி ரத்து செய்யவில்லை என்றால் நீதி மன்றத்தை நாடுவோம் – திண்டிவனத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி பேட்டி.
திண்டிவனம் ராமதாஸ் நகரில் சட்டவிரோதமாக ஆரம்பிக்கப்பட உள்ள தனியார மினரல் வாட்டர் கம்பெனியின் அனுமதியை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், டிவி நகர், TMG நகர், ராமதாஸ் நகர், வடாலப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் இந்த மிரைல் வாட்டர் கம்பெனியின் அனுமதியை ரத்து செய்யவில்லையென்றால் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடருவோம் என்று கூறினார்.
இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.