சினிமா பாணியில் விரட்டிச் சென்று கைது செய்த போலீசார்
வட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆன்ஸ், கூலிப், குட்கா பொருட்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் வடமாதிமங்கலம், கஸ்தம்பாடி, மண்ட கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காரில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக களம்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் ஆரணியில் இருந்து மளிகை பொருட்களை கொண்டு செல்லும் கார்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்தனர்.
போலீசார் வருவதை கண்டு ஆம்னி காரை வேகமாக களம்பூர் பகுதியை நோக்கி இயக்கியதை கண்டு போலீசார்
தனியார் காரில் ஆம்னி காரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று களம்பூர் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் சினிமா பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரை சோதனையிட்ட போலீசார் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆன குட்கா பொருட்கள் இருப்பதைக் கண்டு காரில் இருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா பொருட்களை தடுத்துவதற்கு பயன்படுத்திய ஆம்னி கார், கார் பின்னால் உளவு பார்த்து வந்த இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை ஈடுபட்ட பரத்குமார் என்ற வட மாநில இளைஞரையும்.
புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், களம்பூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபு ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.