in

காவல் துறையினர் தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்தனர்


Watch – YouTube Click

காவல் துறையினர் தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்தனர்

 

கடலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் 8 பேரும் சுயேட்சிகள் 10 பேரும் கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர் இதனையெட்டி 19.4.20 24அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற வாக்குப்பதிவை முன்னிட்டு
காவல் துறையினர் தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை
செய்தனர்.

கடலூரில் மாவட்டத்தில் 19 4 2024 அன்று நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இன்று காவல்துறையினர் பணி நிமித்தமாக மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி அவர்கள் அனைவருமே இன்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்குரிமை பதிவு செய்தனர்.

கடலூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட உள்ள பூத்தில்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜாராம் அவர்கள் தன்னுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்

இதுபோல கடலூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ஊர்காவல் படை மற்றும் RTD காவல் துறையினர் என மொத்தம் 3336 பேர் தாங்கள் தேர்தல் பணி
நிமித்தமாக இன்றே தங்கள் ஜனநாயக கடமையான  வாக்கினை பதிவு செய்தனர்
SP. ராஜாராம் வாக்கு பதிவு வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் DR. அருண் தம்புராஜ் IAS அவர்கள் பாதுகாப்பு பணிகளை  நேரில் ஆய்வு செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

தென் கொரியா தேர்தலில் எதிர்க்கட்சி அபார வெற்றி

அதிமுக ஆட்சி காலத்தில் வருமான வரித்துறை அமலாக்க துறையை வைத்து மிரட்டினார்கள்