in ,

தேர்தலை புறக்கணித்து போராட்டம் வாக்குச்சாவடி வெறிச்சோடியதால் பரபரப்பு


Watch – YouTube Click

சங்கரன்கோவில் அருகே கே கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெரும்பாலான மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வாக்குச்சாவடி வெறிச்சோடியதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது கே. கரிசல்குளம் கிராமம் இந்த கிராமத்தில் சாலை வசதி, வாருகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் கிராமத்தின் அருகே உள்ள டாஸ்மார்க கடையை அகற்ற கோரியும், இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…

மேலும் 1045 வாக்குகள் மொத்தம் உள்ள நிலையில் வெறும் பத்து ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையத்தை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செய்தியாளர்கள் பேசியதை தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தில் செய்தியாளர்களை அனுமதித்தனர்

அடிப்படை வசதிகள் செய்ததராத காரணத்தினால் பெரும்பாலான மக்கள் வாக்களிப்பதை புறக்கணித்த நிலையில் இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க அதை மூடி மறைக்கும் விதமாக சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க மறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது


Watch – YouTube Click

What do you think?

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை செய்தார்

ஜனநாயக கடமையை ஆற்றாத மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்