in

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு


Watch – YouTube Click

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு – தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதே போல தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது .

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை, திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது..

இதனை தொடர்ந்து திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வரகனேரி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மேலும் திருச்சி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசினை வழங்கி உரை ஆற்றினார்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..,

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டில் நிறைவு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் அலுவலகத்தில் உள்ளார் இன்று திருச்சி வரகனேரியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை.. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர்.

நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வர் மு‌க.ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர்.

அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம் என கூறினார்.

பேட்டி : அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.


Watch – YouTube Click

What do you think?

மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் அளித்த மனு

அமைச்சர் மகேஸ்க்கு 10 பவுன் ‘மைனர்’ செயின் அமைச்சர் நேரு மேடையில் அறிவிப்பு