உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் அஞ்சல் துறையினர் தூய்மைப்பணி மேற்கொண்டனர்
உலக சுற்றுச்சூழல் தினமாக ஜூன் 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளிலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு, தூய்மைப் பணிகள் மற்றும் மரம் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்புடைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி நாகை மாவட்டம் விழுந்தமாவடி அருகே காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அதிகம் வந்து கூடு கட்டி குஞ்சு பொரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களால் ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் அழிவை தடுக்கும் விதமாக வனத்துறை உதவியுடன் அஞ்சல் துறையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.