பல விருதுகளை தட்டி சென்ற கோழிப்பண்ணை செல்லதுரை
குடும்ப பங்கான கதைகள் எடுப்பதில் வல்லவர் இயக்குனர் சீனு ராமசாமி இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அண்மையில் கோழிப்பண்ணை செல்லதுரை என்ற படத்தை வெளியிட்டார்
அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பலரை கவர்ந்த நிலையில், ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டது .மேலும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஜிரோனா திரைப்பட விழாவிலும் சிறந்த படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டது .மேலும் ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்திற்காக சீன ராமசாமிக்கு சிறந்த இயக்குனர் வருதையும் பெற்று தந்தது