in

உறுமீன்’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்தார்


Watch – YouTube Click

உறுமீன்’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்தார்

தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று காலை மறைந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ராமா டெல்லி பாபு ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டு நடத்தி வந்தவர்.

2015 ஆம் ஆண்டு பாபி சிம்ஹா  நடிப்பில் வெளி வந்த ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமா துறைக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த ராட்சசன் என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் இப்படம் தெலுங்கு ஹிந்து தமிழ் ஆகிய மொழிகளில் பிளாக் பஸ்டர் மூவி ஆனது அதன் பிறகு ’மரகத நாணயம், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், ‘ஓ மை கடவுளே’, பேச்சிலர்’, ‘மிரள்’ , ‘கள்வன் போன்ற படங்களை தயாரித்தவர்.

இவர் இளம் கதாநாயகர்களை வைத்து பல படங்களை இயக்கி வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றார்.

எல்லோரும் முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் தயாரித்தால் தால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற கோட்பாடை உடைத்தவர்.

திடீரென்று இவருக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை மறைந்தார் 50 வயதில் மறைந்த இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்த நிலையில் அவரின் இறுதிச் சடங்கை சென்னை பெருங்குளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

 84 விநாயகர் விக்ரகங்கள் தாமிரபரணி நதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை