in

டங்ஸ்டன் ஒப்புதலை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்

டங்ஸ்டன் ஒப்புதலை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்

 

டங்ஸ்டன் ஒப்புதலை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும், அரிட்டாபட்டி மலை மீது இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது முடிவு.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தில் கழிஞ்சமலையில் 48 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி டங்ஸ்டனுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

டங்ஸ்டன் ஒப்புதலை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடர வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். டங்ஸ்டனுக்கு எதிரான கூட்டமைப்பின் நிர்வாகிகளான பார்த்திபன், சுந்தரேசன், கருப்பணன் மற்றும் கம்பூர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதுவரை ரத்து செய்வதற்கான அறிவிப்பு எதையும் ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை.

இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முயன்று வருவதாக மக்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த பொதுமக்கள், இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை நாளை முதல் அரிட்டாபட்டி பகுதியில் 48 கிராம பொதுமக்கள் ஒன்று கூடி மாலை நேரங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போராட்டங்களில் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களிலும் நூதன முறையில் ஈடுபட போவதாக கிராம பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

புதுச்சேரியில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைகவசத்தை கட்டாயமாக்க திட்டம்…

வீடு தேடி சென்று நிவாரண உதவிகள் வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்