in

மாணவ மாணவியருக்கு இடைஞ்சலாக கட்டப்படும் கட்டிடம் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

மாணவ மாணவியருக்கு இடைஞ்சலாக கட்டப்படும் கட்டிடம் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்படும் கட்டிடம் மாணவ மாணவியருக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி மாற்றுத்திறனாளி தலைமையில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராம பகுதியில் வசித்து வருபவர் கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி முகேஷ் இவர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் குன்னூர் கிராமத்தில் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் 78 மாணவ மாணவிகள், தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுகிய இடத்தில் இயங்கி வரும் பள்ளியில் கூடுதல் கட்டிடம் 16 இலட்சம் மதிப்பில் பள்ளியின் வளாகத்தின் உட்பகுதியில் கட்டுவதற்க்காக அரசு நிதி ஒதுக்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் கட்டிடம் கட்டினால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு மற்றும் சத்துணவு கூட்டத்திற்கும் பெரும் இடைஞ்சலாக இருப்பதாகவும் பள்ளியின் அருகில் உள்ள நத்தம் புறம்போக்கில் மேற்பகுதியில் உள்ள இடத்தில் இந்த கட்டிடத்தை கட்ட வேண்டும் என கூறி அரசு அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளி முகேஷ் பள்ளியின் நுழைவாயில் முன்பு திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவரைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முகேஷுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில் அதிமுக குன்னூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அரசு அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை நிறுத்தி வைத்தார். ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

What do you think?

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் தயிர்சாதம் ….