in

திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் குடிநீரிலும் விஷம் கலக்கப்பட்டதா மக்கள் பீதி போலீசார் தீவிர விசாரணை

திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் குடிநீரிலும் விஷம் கலக்கப்பட்டதா மக்கள் பீதி போலீசார் தீவிர விசாரணை

 

திருத்துறைப்பூண்டி அருகே உப்பூரில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் மீது மர்ம நபர்கள் விஷம் கலந்த நெல்களை வைத்தால் பரபரப்பு குடிநீரிலும் விஷம் கலக்கப்பட்டதா மக்கள் பீதி போலீசார் தீவிர விசாரணை..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர் ஊராட்சி கோபாலசமுத்திரம் கிராமம் இராவுத்தர் கோவில் அருகே சுமார் 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று உள்ளது.

இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீரும், உள்ளூர் போர்வெலிருந்து எடுக்கப்படும் குடிநீரும் கலந்து இராவுத்தர் கோவில் தெரு, அய்யனார் கோவில் தெரு, பள்ளிகூட தெரு ஆகிய பகுதியில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் சென்ற ஆண்டு இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மேல்புறத்தில் காக்கை புறா கழுகு போன்ற பறவைகளின் எச்சங்கள் குடிநீரில் கரைந்து கலந்ததால் பிரச்சனைகள் ஏற்பட்டது.

அதன்பின்னர் கடந்த 16ந்தேதி தொட்டி மேல்புறம் யாரோ மர்ம நபர்கள் நெல்லில் விஷம் கலந்து வைத்ததால் அங்கு வந்த 7 புறாக்கள் சாப்பிட்டு உயிரிழந்தது. இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களை உடன் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் குடிநீரிலும் விஷம் கலந்து இருக்கலாமா? என கிராம மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டதால் குடிநீர் தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட பின்னர் அனைத்து குடிநீரையும் வெளியேற்றப்பட்டது.

இந்தநிலையில் மர்ம நபர்கள் குடிநீர் தொட்டி மீது விஷம் கலந்த நெல்கள் வைத்த இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு குடிநீரில் மலம் கலந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போன்று சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

What do you think?

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் ஒரு மகத்தான பயணமாக இருக்கும் அமைச்சர் டி ஆர் பி ராஜா திருவாரூரில் பேட்டி

மேம்பாலம் அமைய கையகப்படுத்திய வீடுகள் மற்றும் இடங்களுக்கு இழப்பீடு தராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு