in

ஊருக்குள் புகுந்த கரடி மரத்தின் மீது நின்றதால் பொதுமக்கள் பீதி


Watch – YouTube Click

ஊருக்குள் புகுந்த கரடி மரத்தின் மீது நின்றதால் பொதுமக்கள் பீதி

 

மணிமுத்தாறு பகுதி பட்டப் பகலில் ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களை விரட்டி அடித்தது இதைத் தொடர்ந்து கரடி மரத்தின் மீது நிற்பதால் பொதுமக்கள் பீதி.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புலி சிறுத்தை கரடி மான் மிளா காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் உணவை தேடி வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் இன்று விடுமுறை நாள் என்பதால் அங்குள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அதிகமாக கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் பட்டப்பகலில் மணிமுத்தாறின் பிரதான சாலைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த வழியாக ஒரு கரடி பட்டப்பகலில் சாலையை கடந்து வந்தது இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

பின்னர் அந்த கரடி அங்கே உள்ள 9த் பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியது இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர் மரத்தில் உள்ள கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்களும் அங்குள்ள காவலர்களும் கோரிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முதல் கட்டமாக மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது