in

வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடியே தோல்விக்கும் காரணம் விசிக எம்பி ரவிக்குமார்


Watch – YouTube Click

புதுச்சேரி…பிரதமரின் ஒவ்வொரு நாள் பேச்சும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒவ்வொரு தொகுதியை இழக்க செய்வதாகவும் பாஜகவில் வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடியே அக்கட்சியின் தோல்விக்கும் காரணமாகி விட்டார் என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்…

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எம்பி ரவிக்குமாருக்கு ஆதரவாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் நேரத்தில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதற்காக நாராயணசாமியை ரவிக்குமார் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரவிக்குமார் எம்பி, மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெற இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகிறது என்றும் 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து நாளை 6 ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் இருக்கிறது இது ஒரு பாஜகவிற்கு 15,20 இடங்கள் கூட கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.கடந்த முறை டெல்லி, ஹரியானா மாநிலங்களில் முழுமையாக வெற்றி பெற்ற பாஜகவுக்கு ஒரு இந்த முறை ஒன்று,இரண்டு இடங்கள் கூட கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
உ.பி. உட்பட வட மாநிலங்களில் ராகுல் காந்தியின் பெரிய எழுச்சி தெரிகிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவும் அதை நோக்கி தான் செல்லும் என்றும் ரவிக்குமார் கூறினார்.

ஒவ்வொரு நாளும் பிரதமர் தெளிவில்லாமல் பேசி வருகிறார் தன்னை ஒரு கடவுள் அவதாரம் என்று சொல்லும் அளவிற்கு பிரதமர் பேச ஆரம்பித்து உள்ளார் இது மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் ஒவ்வொரு நாளும் பேச்சும் அவர்களுக்கு ஒவ்வொரு தொகுதியாக இழக்க செய்கிறது என்றார்.
பாஜகவில் வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடியே அக்கட்சியின் தோல்விக்கும் காரணமாகி விட்டார் என ரவிக்குமார் தெரிவித்தார்.

பேட்டி…ரவிக்குமார் எம்பி,

முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில்,
வட மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் அலை வீச துவங்கி விட்டது. காரணம் கடந்து 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த திட்டங்கள் குறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்தும் மக்களிடம் பேசவில்லை.மாறாக காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் இந்தியா கூட்டணி தலைவர்களை தரைகுறைவாக பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். மதத்தின் பெயரால் அரசியல் செய்வதற்கு அவர்கள் முயற்சித்தார்கள்.ராமர் கோயிலை முன் வைத்தார்கள் அது எடுபடவில்லை. இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரிக்கும் வேலையை பார்த்தார்கள். அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என நாராயணசாமி கூறினார்.

நான் ஒரு அவதார புருஷன் என்று பிரதமர் பேச ஆரம்பித்து விட்டார். எல்லோரும் கடவுளால் தான் அனுப்பப்பட்டவர்கள். அவர் ஏதோ புதிய பிறவி போல் பேசுகிறார்.கொள்கையை பற்றி பேசாமல் தரம் புரண்டு பிரதமர் பேசுகிறார் எனவும் நாராயணசாயி விமர்சித்தார்.

இந்தியா கூட்டணி 300 மேற்பட்ட இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி பெரும் என கூறிய நாராயணசாமி, ராகுல் காந்தி தான் பிரதமர் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். இதேபோல் நேரம் வரும்போது மற்றவர்கள் கூறுவார்கள்.. தன்னைப் பொறுத்தவரை ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம் என நாராயணசாமி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

என்ன பெரிய்ய ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்கூல் ஆஃப் புரோட்டா தெரியுமா?

மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார்