in

பழனி திருக்கோயிலின் உண்டியல்கள் காணிக்கை வரவு ரூ.2.78 கோடியை தாண்டியது

பழனி திருக்கோயிலின் உண்டியல்கள் காணிக்கை வரவு ரூ.2.78 கோடியை தாண்டியது

 

பழனி திருக்கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ஒரு மாத காணிக்கை வரவு ரொக்கம் வரவு ரூ.2.78 கோடியை தாண்டியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் கடந்த 31 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 78 இலட்சத்து ஒரு ஆயிரத்து 835 கிடைத்துள்ளது. தங்கம் 953 கிராமும், வெள்ளி 20,575 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் 2,085 ம் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது.

இவை தவிர பித்தளை, தாமிரத்தாலான பூஜை பொருட்களும், கடிகாரம், பட்டு, ஏலக்காய், நவதானியங்கள் போன்றவைகளும் உண்டியலில் கிடைக்கப்பெற்றது.

உண்டியல் எண்ணிக்கையில் வங்கி பணியாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

What do you think?

சனீஸ்வரர் பகவான் அருள் பாலிக்கும் திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் டி ஆர் பி ராஜா பேட்டி