in

நெல்லை ராம் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் உற்சாக நடனம்

நெல்லையில் வேட்டையன் திரைப்படம் வெளியானது ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. காவல்துறை என்கவுன்டரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் நாளை (அக்.10) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து அக்டோபர் 10-ம் தேதி ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை மேலப்பாளையம் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் நெல்லை டவுன் ஆகிய பகுதியில் உள்ள முக்கியமான திரையரங்குகளில் வேட்டையின் திரைப்படம் இன்று காலை திட்டமிட்டபடி 9 மணிக்கு வெளியானது.

நெல்லை ராம் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் உற்சாக நடனமாடியும் மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பிளக்ஸ் பேனர்கள் பதாகைகள் வைத்து முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடி வருகிறார்கள்.

இதனால் நெல்லை ராம் திரையரங்கிற்கு நெல்லை மாநகர சந்திப்பு காவல்துறை சார்பாக போலீஸ் பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது.

What do you think?

மாவட்ட அளவிலான தபால் தலைக் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது

சென்னைக்கு குடிநீர் செல்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்