in

நீட் தேர்வுக்குப் விளக்கு தீர்மானத்தை இயற்றி இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்


Watch – YouTube Click

நீட் தேர்வுக்குப் விளக்கு தீர்மானத்தை இயற்றி இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்

 

நீட் தேர்வுக்குப் விளக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றி இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு கோரி தீர்மானம் இயற்ற தொடர்ந்து வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்ச ரங்கசாமியை திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்எல்ஏ சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார் அதில் நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஆளும் அரசு அதற்கு முன்வரவில்லை.

பழைய கல்விக் கொள்கையைத்தான் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா. காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். ”கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக கல்விக்கொள்கை இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

அதனடிப்படையில் தான் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே. ராஜன் அவர்கள் அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, நீண்ட காலதாமதத்திற்கு பின், குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறது.

இதனிடையே, நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘நீட் தேர்வில் தவறு நடந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும்,” என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், ”நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது” எனக் கூறியதுடன், நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆகவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாணவர் சமுதாயம் எழுச்சி பெற புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றி, அதனை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டுமென புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த சந்திப்பின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூ. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, தொகுதி செயலாளர்கள் நடராஜன், து. சக்திவேல், மாநில மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், வழக்கறிஞர் அணி பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், ஆதிதிராவிடர் நலக்குழு செல்வநாதன், சபரிநாதன், நவீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆலம்பூண்டி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி

அதிமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை ரவிக்குமார் எம்பி பேட்டி