in

முசிறி அருகே கோவில் முன்பு வைக்கப்பட்ட மணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அகற்றியதால் பரபரப்பு

முசிறி அருகே கோவில் முன்பு வைக்கப்பட்ட மணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அகற்றியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே பிள்ளாபாளையம் கிராமத்தில் மதுரைவீரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பாக ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இரும்பு தூண்கள் அமைத்து அதில் மணி கட்டி தொங்க விட்டுள்ளனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர்மணி பாதையில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பாக தொங்க விடப்பட்ட மணி மற்றும் இரும்புக் தூண்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு மணி அமைத்த தரப்பினர் மறுப்பு தெரிவித்த நிலையில் உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் சென்றுள்ளனர்.

இரும்புத்தூண் மற்றும் மணி ஆகியவற்றை அகற்றுவதற்கு மணி அமைத்தவர்கள் கருப்பு கொடிகட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக முசிறி போலீஸ் டி.எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முசிறி தாசில்தார் லோகநாதன் மேற்பார்வையில் வருவாய் துறையினர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இரும்புத்தூண் மற்றும் மணி ஆகியவற்றை அகற்றினர்.

இதற்கு மணி அமைத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கருப்புக் கொடி கட்டியது தொடர்பாக போலீசார் 80-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளதாக தெரியவருகிறது.

What do you think?

தரைக்கடை வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை