மேற்கூரை இடிந்து விபத்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்
மேலமாப்படுகை குழந்தைகள் மையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து, அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி தப்பிய குழந்தைகள், கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமாட்படுகை கிராமத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பகல் நேரத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கு சுமார் 20 குழந்தைகள் வரை உள்ள நிலையில் பழமையான கட்டிடத்தில் மேற்கூறையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இடிந்து விழும் காரை பகுதி பற்றி தெரியாத குழந்தைகள் அதனை ஆச்சரியத்துடன் பார்க்கும் வீடியோ வெளியாகி வருகிறது.
அங்கு பயின்று வரும் குழந்தைகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.பழுதடைந்த இந்த கட்டிடத்தை சீரமைக்கும் வரை அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அச்சத்துடனே இருக்கவேண்டி இருக்கிறது என்று குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.