முன்னணி நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்
முன்னணி நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் மற்றும் திரைப்படங்களுக்கு வரி விதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.
இந்த கோரிக்கைகளை முன் வைத்து, கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் Strike செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது’ திரைப்படங்களுக்கான வரியை அரசு இரட்டிப்பாக்கி உள்ளது, சினிமா டிக்கெட் களுக்கு ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது.
நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் ஒரு படத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 60% நடிகர்களுக்கே சென்று விடுகிறது.
ஜனவரி மாதத்தில் இருந்து மலையாள சினிமாவில் வெளிவந்த படத்தால் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1ஆம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்.