in

இதே நிலை உங்களுக்கும் திரும்பும் -பெலிக்ஸ் பலத்த குரலில் செய்தியாளர்கள் முன் பேச்சு

இதே நிலை உங்களுக்கும் திரும்பும் -பெலிக்ஸ் பலத்த குரலில் செய்தியாளர்கள் முன் பேச்சு

 

பெண் போலீசார் பற்றி அவதுாறு பேட்டிக்கு உடந்தை ‘ரெட்பிக்ஸ்’ ஆசிரியர் திருச்சி சிறையில் அடைப்பு- இதே நிலை உங்களுக்கும் திரும்பும் என நீதிமன்ற வாசலில் பெலிக்ஸ் பலத்த குரலில் செய்தியாளர்கள் முன் பேச்சு

பெண் போலீசார் பற்றி அவதுாறு பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த, ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழக பெண் போலீசார் பற்றி தரக்குறைவாகவும், அவதுாறாகவும் ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார். இது தமிழக பெண் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பெண் போலீசார் கொடுத்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறி பெண் டி.எஸ்.பி., யாஸ்மின் என்பவர், சவுக்கு சங்கரின் பேட்டியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீதும், அவரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கர், திருச்சி வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்கில் சிக்கிய மற்றொருவரான பெலிக்ஸ் ஜெரால்டை, கடந்த, மூன்று நாட்களுக்கு முன், திருச்சி தனிப்படை போலீசார் டில்லியில் கைது செய்து, ரயிலில் திருச்சி அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெலிக்ஸ் மனைவி, திருச்சி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவரை, திருச்சி போலீசார் அழைத்து வந்து, சட்டவிரோதமாக மறைத்து வைத்துள்ளதாகவும், அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மதியம், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்துக்கு, பெலிக்ஸ் ஜெரால்டு அழைத்து வரப்பட்டார். பின், அங்கிருந்து, திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் நடந்த விசாரணையில், பெலிக்சை சிறைக்கு அனுப்ப, அவருடைய வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேநேரம் போலீஸ் தரப்பிலும், பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசார் நீதிபதியிடம், கடும் சிரமங்களுக்கு இடையே பணியாற்றும் எங்களுக்கு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், பெலிக்சுக்கு எந்த தயவும் காட்டக்கூடாது என்று கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்சை, வரும், 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பெலிக்ஸ், திருச்சி மத்திய சிறைக்கு, பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
பொதுவாக ஆண்களை கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது, ஆண் போலீசாரே அதிகளவில் இருப்பர். ஆனால், நேற்று பெலிக்ஸ் பாதுகாப்புக்கு பெண் போலீசாரே அதிகளவில் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை ரயில் மூலம் சென்னை அனைத்து வந்து, அங்கிருந்து இன்று திருச்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.மாலை 5 மணி அளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க கூடாது என்று வாதாடினோம். டெல்லி சென்று கைது செய்யும் அளவுக்கு இவர் மீது குற்றமில்லை. இவர் வெளியீட்டாளர் மட்டுமே. போலீஸ் அதிகாரிகளையும் போலீசாரையும் இவர் அவதூறாக பேசவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தேன்.
யூடியூப் சேனலில் ஒளிபரப்பான வீடியோவை பார்த்துவிட்டு, 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் .

இருப்பினும் எங்கள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளோம் . விசாரணை நடைபெற்ற போது மூன்று பேர் தானாக முன்வந்து எங்களிடமும் கேளுங்கள் என்றனர். வழக்கு பதிவு செய்த போது போடப்பட்ட சட்டப்பிரிவுகளை திருத்தம் செய்து உள்ளனர். ஒரு சட்ட பிரிவை தவிர மற்றவை அனைத்தும் ஜாமினில் வர முடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். நீதிமன்றம் தான் அதை பரிசீலித்து எடுக்கும் முடிவு தான் இறுதியானது.

15 நிமிடம் நீதிமன்ற அனுமதி கேட்டு ஜெராலிடிடம் பேசிய போது போலீசார் எதுவும் அடித்து துன்புறுத்தவில்லை. நீண்ட நேரம் உட்கார்ந்து பயணம் செய்ததால் காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது, என்று தெரிவித்தார். போலீசார் அவரை நல்ல முறையில் நடத்தியதாகவே தெரிவித்தார். ஜெரால்டை அழைத்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் போலீசார் . அவர்கள் கருத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றனர். பெண் போலீசார் கருத்தையும் நீதிபதி கேட்டுக்கொண்டார். சவுக்கு சங்கர் அவதூறாக பேசியது எங்களை பாதித்துள்ளது என்று பெண் போலீசார் தெரிவித்தனர். இவ்வாறு ஜெரால்டு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வெளியில் போலீசார் பெலிக்ஸை அழைத்து வந்த பொழுது வேனில் ஏறும் பொழுது செய்தியாளர்கள் முன் பேசிய பெலிக்ஸ் நம்மைப் போன்ற எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இந்த நிலைமை ஒரு நாள் வரும். பத்திரிக்கையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு நாள் இந்த நிலை அனைவருக்கும் திரும்பும்.

விரிவாக வெளியில் வந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறேன் என்று சொல்லிய பொழுது காவல்துறையினர் இழுத்து வேனிற்குள் தள்ளி ஏற்றினர்.

What do you think?

பெலிக்ஸை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வந்த மாவட்ட காவல்துறையினர்

ட்ரோன் முறை மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்தும் விவசாயிகள்