in

நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் கோலாகலமாக கொண்டாட்டம்

நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் கோலாகலமாக கொண்டாட்டம்

 

நான்குநேரி வானமாமலை ஜீயர் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் கோலாகலமாக கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்.

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதான ஸ்ரீ வானமாமலை பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது, இங்கு மூலவரான தோத்தாத்திரி பெருமாளுக்கு 3 படி நித்திய எண்ணெய் காப்பு நடப்பது தனி சிறப்புஆகும்.

வானமாமலை மடத்தின் 31வது பட்ட மடாதிபதியான ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் கொண்டாடப்பட்டது. இந்த மார்கழி உத்திராடம் நட்சத்திர நாளை முன்னிட்டு கடந்த நவம்பர் 24ம் தேதி (கார்த்திகை பூரம் ) முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் முதல் பகுதியாக காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வானமாமலை மடத்தில் ஸ்ரீபாஷ்ய பகவத் விஷய வேதாந்த சதஸ்,உபன்யாசங்கள் நடைபெற்றன. இரண்டாம் பகுதியில் திவ்யப்ரபந்தபாராயணம் சதுர்வேதபாராயணம் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடைபெற்றன, விழாவின் மூன்றாம் பகுதியில் அயோத்தி காட்மண்டு நேப்பாள் பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஸ்ரீ வானமாமலை கிளை மடங்களின் மகந்துகள், ஆச்சார்களின் இராமாயண நவாகம், பாகவ சப்தாகம் சொற்பொழிவு, இந்தியில் பஜனைகள் என இயல், இசை, நாடகம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு காலையில் திருக்கோயிலுக்கு ஏமுந்தருள அங்கு வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாற்றுமுறை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஜீயர் சுவாமிகளுக்கு பரிவட்டம் கட்டி மாலைகள் அணிவித்து தீர்த்தம் சடாரி மரியாதை செய்யப்பட்து, பின்னர் ஸ்ரீமடத்தின் வாசலில் ஜீயர் சுவாமிக்கு நாங்குநேரி திருக்குறுங்குடி ஆழ்வார்திருநகரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீரங்கம் திருப்பதி, ரிசிகேஷ், பத்ரிநாத், பூரி ஜெகன்னாத், நேபாள் உள்ளிட்ட பல்வேறு திவ்ய தேசங்களில் இருந்து வந்திருந்த பெருமாள் பிரசாதங்களால் ஜீயர் சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.

 

மாலையில் பகல்பத்து உற்சவத்தின் 2ம் நாளில் பெருமாளுக்கு காளிங்கநா்த்தன அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பிரபந்ததாரா்கள் பொிய திருமொழி பாட சுவாமிக்கு மாியாதைகள் செய்யப்பட்டது. அதனை தொடா்ந்து பல்லக்கில் புள்ளிவாய் கீண்டான் அலங்காரத்தில் பெருமாள் ஏழுந்தருள கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இரவில் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் தங்க பல்லக்கு பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளையும் ஜீயர் சுவாமிகளையும் தரிசித்து ஆசிபெற்றனர்.

What do you think?

பெங்களூர் கார்மேலாராம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரெயில்கள் தவிக்கும் தமிழ்நாடு பயணிகள்

திருவண்ணாமலையில் மண்சரிவு விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி