in

அரசு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்ததால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி!


Watch – YouTube Click

அரசு பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்ததால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி!

 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு 7.5% அளிக்கப்படுகிறது. விலையில்லா காலணி புத்தகங்கள் புத்தகப் பை காலணிகள் சைக்கிள் மடிக்கணினி, , விலையில்லா பேருந்து பயண அட்டை, கல்லூரியில் பயிலும் போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களால் துவக்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் காரணமாக அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தது.

தற்போதைய அரசு மதிய உணவு உடன் காலை உணவையும் சேர்த்து வழங்கி வரும் நிலையில் அரசு பள்ளிகளின் மாணவ மாணவிகள் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.

உதாரணமாக மயிலாடுதுறை நகராட்சிக்கு செயல்படும் தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகன், பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி, பிரபல எழுத்தாளர் சா கந்தசாமி, டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி முன்னாள் தலைமைச் செயலாளர் சொக்கலிங்கம், திரைப்பட இயக்குனர் டி ராஜேந்தர் உள்ளிட்டோர் பயின்ற 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும்.

இந்தப் பள்ளியில் 1500 மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது 300 மாணவர்களே கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் புதிதாக இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இதே போல் மற்றொரு நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆன கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10 மாணவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

பள்ளியின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணிகள் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெற்றோரிடம் பெருகிவரும் ஆங்கில கல்வி மோகம் ஒருபுறமும் ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கம் முக்கிய காரணியாக உள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற தமிழக அரசின் சட்டம் காரணமாக கண்டிப்பு என்பது இல்லாமல் துள்ளித் திரியும் டீன் ஏஜ் பருவத்தில் தாங்கள் செய்வது எது என்பது கூட தெரியாமல் மாணவர்கள் வகுப்பறை கட்டடிப்பது, பாடங்களை ஒழுங்காக படிப்பது கிடையாது போன்ற நடவடிக்கைகள் பெற்றோரை பாதித்துள்ளது.

அதுமட்டுமன்றி பெரும்பாலான அரசு பள்ளி கட்டிடங்கள் முறையாக பராமரிக்காத காரணத்தாலும் கழிவறை குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யாத காரணத்தாலும் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் பெற்றோர்கள் படிக்க வைப்பதாக ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கு கல்வி பணி இல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களை குறித்து கணக்கெடுக்கும் பணி உள்ளிட்ட பல பணிகள் வழங்கப்படுவதால் அவர்களுடைய வேலை பளுவால் கல்வியின் தரம் குறைவதால் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு ஒரு ஆய்வு கமிட்டி அமைத்து மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அரசு பள்ளியில் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தையும் இயற்றுவது காலத்தின் கட்டாயம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

அரசுப் பள்ளிகளின் தரம் உயராத காரணத்தாலும், தனியார் பள்ளிகளை நாடும் பொதுமக்கள்

தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு