திண்டிவனம் ஸ்ரீ ருத்ர பராசக்தி அருள்வாக்கு பீடத்தில் இரண்டாம் ஆண்டு சண்டி ஹோமம்
திண்டிவனம் மரக்காணம் ரோடு ஸ்ரீ ருத்ர பராசக்தி அருள்வாக்கு பீடத்தில் இரண்டாம் ஆண்டு சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மரக்காணம் ரோடு ஸ்ரீ ருத்ர பராசக்தி அருள்வாக்கு பீடத்தில் இரண்டாம் ஆண்டு மகா சண்டி ஹோமம்முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
இரவு துர்கா லட்சுமி, சரஸ்வதி, சண்டிகா தேவி ஆவாஹன பூஜை மற்றும் தீபாராதனையை தொடர்ந்து 64 யோகினி, 64 பைரவ பலி தானங்கள் பூஜையும் நடந்தது. இரண்டாம் நாளான காலை கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும், தீப ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து மகிஷ பூஜை (கோ பூஜை) பின்னர் வேதிகா பூஜை, நவாவரண பூஜையும், மகா கணபதி ஹோமமும், தேவி மஹாத்மியம், 13 அத்தியாய சப்தஸதி பாராயணம் ஹோமமும், 700 பீஜாஷர மூல மந்திர ஹோமமும் நடந்தது.தொடர்ந்து ஸ்ரீ ருத்ர பராசக்தி மகா அபிஷேகம் நடந்தது.
மதியம் 12 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை நடந்தது.மதியம் 1 மணிக்கு யாக குண்டத்தில் பட்டுப்புடவை சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து ஸ்ரீ ருத்ர பராசக்தி கட அபிஷேகமும் பின்னர் அலங்கரிக்கப்பட்ட எட்டியம்மனுக்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.