ரதசப்தமி உற்சவம் இரண்டாவது வாகன புறப்பாடாக சின்னசேஷ வாகன புறப்பாடு
சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி மலையில் நடைபெறும் ரதசப்தமி உற்சவத்தின் இரண்டாவது வாகன புறப்பாடாக உற்சவர் மலையப்ப சாமியின் சின்னசேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக இன்று அதிகாலை திருப்பதி மலையில் சூரிய பிரபை வாகன புறப்பாடு நடைபெற்ற நிலையில் இரண்டாவது வாகன புறப்பாடாக சின்னசேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பி வழிபாடு மேற்கொண்டனர்.
ரத சப்தமி தினமான இன்று ஏழுமலையானின் ஏழு வாகன புறப்பாடுகள் நடைபெறும் ஆகையால் ஒரே நாளில் ஏழு வாகன புறப்பாடுகளையும் கண்டு வழிபட வேண்டும் என்பதற்காக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் பாதுகாப்பு ஆகியவை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.