in

இலங்கை காங்கேசன துறைக்கு வரும் ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் சேவை தொடங்கும்

இலங்கை காங்கேசன துறைக்கு வரும் ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் சேவை தொடங்கும்

 

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன துறைக்கு வரும் ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் சேவை தொடங்கும்: கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளரிடம் கூறும்போது

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து முக்கிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் ஜனவரி 2ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதில் கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளதோடு இரு வழி பயணத்திற்கு முன்பு 9700 நிர்ணயிக்கப்பட்டது நிலையில் தற்போது 8,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் போது 10 கிலோ வரை இலவச சுமை அனுமதிக்கப்படும்.

அதிகாலை பயணத்திற்கு பயணிகள் வருவதால் காலை உணவிற்காக சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பயணச்சலுகையாக காலை உணவாக இட்லி பொங்கல் வழங்கப்படும் மதிய உணவாக வெஜ் பிரியாணி புலவு போன்ற உணவு வகைகள் பரிமாறப்படும். மேலும் இரண்டு இரவு மூன்று நாள் தங்கும் வசதி கொண்ட குறுகிய பயண பேக்கேஜுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயணத்திட்டங்கள் நடுத்தர வர்க்க பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

What do you think?

Shocking… மருத்துவமனை…க்கு கொண்டு செல்லப்பட்ட போட்டியாளர்

சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பயிர்கள்