in

திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மக பெருவிழா சிம்ம வாகன சேவை நடைபெற்றது

திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மக பெருவிழா முன்னிட்டு சிம்ம வாகன சேவை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீசௌமியநாராயணப் பெருமாள் திருக்கோவிலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு இரண்டாம் திருநாள் சிம்ம வாகன சேவை நடைபெற்றது இவ்விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் இரண்டாம் திருநாளில் சிம்ம வாகன சேவை நடைபெற்றது

தேவலோகத்தில் இந்திரன் பூஜித்த சவுமிய நாராயணரே இக்கோயில் உற்சவராக எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. தேவர்களின் திருக்கை அதாவது துன்பம் நீக்கிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்று பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

பல சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் மாசி மக பெருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது

முன்னதாக கோவில் நரசிம்மர் மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு மண்டபத்திலிருந்து மேளதாள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மங்கள வாத்தியங்கள் வான வெடிகள் உடன் கருட வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

What do you think?

திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா