in

மலையாள சினிமா உலகில் வீசும் சூறாவளி …. பல நடிகர்கள் சிக்குவார்களா?

மலையாள சினிமா உலகில் வீசும் சூறாவளி …. பல நடிகர்கள் சிக்குவார்களா?

 

கேரளா திரையுலகில் நடிகைகளுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நாளுக்கு நாள் துன்புறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் 2017 ஆம் ஆண்டு பல முன்னணி நடிகர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த குற்றங்களை தடுக்கவும் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பலரையும் அதிர்ச்சியடைய வைத்ததும் இல்லாமல் சினிமா உலகில் சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களுக்கு எதிராக சமூக ஆர்வலர்களும் பல அரசியல் கட்சிகளும் மலையாள சினிமா உலகினரை குற்றம் சாட்ட ஒரு சில நடிகர்கள் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

சித்தி. ரஞ்சித் மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் மீது நடிகைகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர்.

இதனை தொடர்ந்து பல நடிகைகள் வரிசையாக புகார் அளிக்க கேரள முதல் மந்திரி பிரனாய் விஜயன் தலைமையில் நேற்று அவசர அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஹேமா கமிஷன் கொடுத்துள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கப்பட்ட அறிக்கை மற்றும் சாட்சியங்களை வைத்து நாங்கள் விசாரிக்க மாட்டோம் என்று கூறியதிலிருந்து கேரளா அரசு குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சதீஷ் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் மேலும் பல நடிகர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

மூன்றாவது திருமணம் செய்ய ஆசைதான்… ஹிந்தி நடிகர் அமீர்கான்

அருண்மொழித்தேவன் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம்