in

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

 

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் வெற்றிக் கோப்பையை தூக்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற மாணவன் மற்றும் பொதுமக்கள்.

திருவாரூர் புதுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாநில அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்க போட்டி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக 22 மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் போட்டி நடைபெறும் தனியார் பள்ளிக்கு செல்வதற்காக திருவாரூருக்கு வந்தனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதுத்தெரு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் பல மாதங்களாக மந்த கதையில் நடைபெற்று வருகின்றன.

இதற்காக திருவாரூர் புதுத்தெரு பகுதியில் பழைய சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும், புதிதாக சாலை போடாமல் நெடுஞ்சாலைத் துறையினர் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அந்த பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மண்புழுதியால் ஏற்படும் புகை மூட்டத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருவதால் நாளை முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளன. இதற்காக அவசரகதியில் நேற்றும், இன்றும் புதுத்தெரு பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்து வருகின்றனர்.

இதற்காக பொதுமக்களிடம் எந்தவித முன் அறிவிப்பும் செய்யப்படாமல் சாலையில் பேரிக்காடுகள் அமைத்து வாகனங்கள் செல்லாமல் தடுத்து சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக புது தெரு பகுதிக்கு வந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் திருவாரூர் நகராட்சி சார்பில் எந்தவித முன்னறிவிப்பும் செய்யப்படாததால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளியை அடைந்தனர்.

சாலை பணிகள் மாலை வரை நடைபெற்றதால் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்களுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வெற்றிக்கோப்பை உடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி நடந்து சென்று கீழ வீதி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

ஆனால் 40 நிமிடங்களை தாண்டியும் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆட்டோக்களில் புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெறும் சமயத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தினர் எந்தவித முன்னேற்பாடு பணிகளும் செய்யாததால் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செஸ் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக்கோப்பையுடன் மாணவர் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது பார்ப்பவர்களை வேதனை அடைய செய்தது

What do you think?

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டாவை, மனைபட்டாவாக புதுப்பித்துதர கிராம மக்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்