பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா கிடைப்பதனால் மாணவர் சமுதாயம் சீரழிக்கப்படுகின்றது
அதிமுக -தேமுதிக ஆரணி பாராளுமன்ற வேட்பாளர் கஜேந்திரனுக்கு திண்டிவனம் அடுத்த தீவனூர், அகூர், ரெட்டணை, பெரமண்டூர், வெங்கந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய சி.வி. சண்முகம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த அகூரில் வாக்கு சேகரித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசும் போது, நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கின்றதோ இல்லையோ, பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களிலேயே கஞ்சா கிடைக்கின்றது. இதனால் மாணவர் சமுதாயம் சீரழிவதோடு, நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
உதாரணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக காதலர்களை கட்டி வைத்துவிட்டு சகோதரிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அரங்கேரி .உள்ளது என்று கூறினார் .மேலும் அவர் பேசும் போது, மதத்தின் பெயரால் பாரதிய ஜனதா கட்சி நம்மை பிரிக்க நினைக்கின்றது என்றும் இவற்றிற்கெல்லாம் சவுக்கடி கொடுக்க வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் புலியனூர் விஜயன், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன் தேமுதிக. ஒன்றிய செயலாளர் முருகன், உள்ளிட்ட அதிமுக தேமுதிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.