திண்டுக்கல்லில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளிக்குச் செல்லாமல் பேருந்து வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளால் பரபரப்பு.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் குறும்பொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திண்டுக்கல் எம் வி எம் கல்லூரி அருகே அமைந்துள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்குச் செல்ல தினசரி நெடுஞ்சாலையை கடந்து ஆபத்தான முறையில் நடந்தே பள்ளிக்கு சென்று வருவதாகவும் இந்நிலையில் பள்ளிக்கு வந்து செல்ல காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளும் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென இன்று பள்ளி திறந்த நிலையில் மாணவர்கள் பள்ளி செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது