in

ஒரு மணி நேரம் வரை ரயில்வே கேட் மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவ மாணவிகள், ஆபத்தை உணராமல் மூடிய ரயில்வே கேட்டு வழியே பயணம்

மயிலாடுதுறை அருகே மாப்படுகை என்ற இடத்தில் மூடப்படும் ரயில்வே கேட், காலை 8:30 மணி முதல் சரக்கு ரயிலுக்காக ஒரு மணி நேரம் வரை ரயில்வே கேட் மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவ மாணவிகள், ஆபத்தை உணராமல் மூடிய ரயில்வே கேட்டு வழியே பயணம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைக்கு கும்பகோணம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளின் வழியே வருவதற்கு நன்றாக சித்தர்காடு மேம்பாலம் மற்றும் மாப் படுகை என்று இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. இரண்டு வழிகளிலும் ரயில்வே லெவல் கிராசிங் உள்ள நிலையில் அந்த இருப்பு பாதை வழியே தினமும் 21 பயணிகள் ரயில்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் விழுப்புரம் அல்லது திருச்சி செல்லும் ரயில்கள் சன்டிங் என்ற பெயரில் இன்ஜின் மாற்றுவதற்கும் ரயில் பெட்டிகளை மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகளுக்கு எடுத்துச் செல்லவும் தினமும் ஏழு முறை பாதை மாற்றும் பணி நடைபெறுகிறது.

மாப்படுகை என்ற இடத்தில் நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட முறை ரயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன இந்த ரயில்வே கேட் மயிலாடுதுறை கும்பகோணம் செல்லும் கல்லணை வழி சாலையின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு 40 க்கும் மேற்பட்ட முறைகள் ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை எட்டு மணி முதல் 9 மணி வரை ரயில்வே கேட் சரக்கு ரயிலுக்காக மூடப்படுகிறது இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மற்றும் திருச்சிக்கு செல்லும் நோயாளிகள் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் ஆம்புலன்சில் வரும்போது காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடைமுறை படுத்தவில்லை. குறைந்தபட்சம் சன்டிங் செய்யும் ரயில் பாதை மாற்றும் பணியை உடனுக்குடன் செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே கேட் மூடப்பட்ட நிலையில் பள்ளி செல்லும் அவசரத்தில் மாணவ மாணவிகள் ஆபத்தை உணராமல் மூடப்பட்ட ரயில்வே கேட்டு வழியே இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை

விவசாயிகள் சாலை மறியல், அரசை குறை கூறினால் பொய் வழக்கு போடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டு