டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணியை புறக்கணித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு, பிற மாநிலங்களைப் போல் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடுகளை அமல்படுத்த வேண்டும். டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணிக்கு உரிய தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.